ஜனாதிபதி கோட்டாபயவின் மனைவியிடம் இப்படி ஒரு குணமா? பலரையும் வியக்கவைத்த சம்பவம்!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்ச வீதி ஒழுங்கை மீறி பயணி த்தமைக்காக பொலிஸாா் அபராதம் விதித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அனுராதபுரத்தில் மத வழிப்பாடுகள் மேற்கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியின் சட்டத்தை மீறியமையினால் அவர் பயணித்த வாகனத்தை பொலிஸார் நிறுத்தியபோது, குறித்த வாகனத்தில் ஜனாதிபதியின் மனைவி என்றதும் பொலிஸார் குழப்பம் அடைந்துள்ளனர்.

எனினும் எந்த பிரச்சினையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் தான் வாகனத்திற்குள் இருப்பதனை கூறாமல் தவறை ஏற்றுக் கொண்டு, அபராத பத்திரத்தை தருமாறு அயோமா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத வழிப்பாடு நிறைவடைந்து வீட்டிற்கு சென்ற அயோமா, சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அபாரத பணத்தை செலுத்தி சாரதி அனுமதி பத்திரத்தினை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டாபாய ,மனைவி அயோமா ராஜபக்ச கூறியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதியின் மனைவி என்ற கர்வம் சிறிதும் இல்லாமல் நாட்டின் சட்டங்களை மதித்து நடந்த அயோமா ராஜபக்சவின் செயலானது பலருக்கும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.