விமான நிலைய ஸ்கானரை ஆய்வு செய்த ஜனாதிபதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பரிசோதனை ஸ்கானரின் செயற்பாடுகளை ஜனாதிபதி கோட்டாபய நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

விமான நிலையத்தில் சுங்கப்பிரிவில் நிறுவப்பட்டுள்ள குறித்த ஸ்கானர், மறைத்து வைத்திருக்கும் போதைப் பொருட்களை உடல் பரிசோதனை இல்லாமலே கண்டறியும்.

இந்தியப்பிரதமை நரேந்திரமோடியின் அழைப்பினை ஏற்று இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பினார்.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பியபோது, குறித்த ஸ்கானர் வழியாக ஜனாதிபதி குழுவினரின் பயணப்பொதிகளும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.

இதன்போது, ஸ்கானரின் செயற்பாடுகளையும் ஜனாதிபதி கோட்டாபய நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.