யார் என்ன சொன்னாலும் மொட்டை கைவிட முடியாது

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைக்கும் போது பொது தேர்தலுக்காக பொதுவான சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்திருந்தது.

எனினும் , தற்போது மொட்டு சின்னத்தை கைவிட முடியாது என கடுமையான அழுத்தத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரயோகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகிய தேர்தல் இரண்டும் பாரியளவில் வெற்றியீட்டிய மொட்டு சின்னத்தில், எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடவேண்டும் எனபெரமுனவின் முன்னணி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

விசேடமாக மொட்டு என்பது தற்போது ஸ்ரீலங்காவில் பிரபலமான தேர்தல் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், வேறு தேர்தல் சின்னத்தினூடாக செல்ல எத்தகைய வாய்ப்பும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் அடுத்த சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் புதிய தேர்தல் சின்னத்தை ஊக்குவிக்க போதுமான காலநேரம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரு கட்சிகளுக்கிடையிலும் ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் தமக்கு குற்றம்சாட்டினாலும் மொட்டு சின்னத்தை மாற்ற இயலாது என தெரிவித்திருந்தார்.

அத்துடன் அடுத்த பொது தேர்தலில் வெற்றிப்பெறுவது மொட்டு சின்னத்தில் என தற்போது இருந்து தான் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் அடுத்த இரண்டு வாரத்திற்குள் ஸ்ரீ.பொ.ஜ.பெ உடன் கலந்துரையாடுவதாக ஸ்ரீலசுக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இரு கட்சியும் கூட்டணியாக நாட்காலி சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்பதே ஸ்ரீலசுக முடிவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.