இரண்டு வாரத்தில் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் சிறீகாந்தா

தமிழினத்தின் அடிப்படை அரசியல் உரிமைகள் மற்றும் ஜனநாயக வேட்கையை நிலைநிறுத்துவதற்காக புதியதொரு அரசியல் இயக்கத்தை இன்னும் இரண்டு வாரத்தில் ஆரம்பிக்க உள்ளதாக , ரெலோவின் முன்னாள் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

ஐதேகவின் கிளையாக, தமிழினத்தின் அரசியல் அபிலாசைகளை மழுங்கடித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசுக் கட்சியை எங்கு அனுப்ப வேண்டுமோ அங்கு அனுப்ப அனுப்ப தாம் தயாராக உள்லதாகவும் சூளுரைத்துள்ளார்.

மேலும், தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பு , தமிழரசுக் கட்சியின் எடுபிடியாக ஒட்டிக்கொண்டு செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துளார்.

எனவே, மீண்டும் ரெலோவுடன் இணைந்து கொள்வதென்பது சாத்தியமில்லை என்றும், ஆகவே தனியாக பயணிக்க உள்ள நிலையில், தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளை இணைந்ததாக அந்தப் பயணம் அமையும் என்றும் ரெலோவின் முன்னாள் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா கூறியுள்ளார்..