வடமேல் மாகாண ஆளுநராக பொறுப்பேற்றார் முஸம்மில்!

ஜனாதிபதி கோட்டாபய பதவியேற்றதன்பின்னர் புதய அமைச்சரவை நியமிக்கபட்டுஇருந்தது.

அத்துடன் மாகாணங்களுக்கான ஆளுநர்களும் புதிதாக நியமிக்கபட்டிருந்தனர்.

அந்தவகையில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் AJM முஸம்மில் வடமேல் மாகாணத்தின் 12 ஆவது ஆளுநராகக் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந் நிகழ்வில் மதகுருமார்களுடன் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெரேரா, ராஜாங்க அமைச்சர் தயாசிறி, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உட்பட பெருமளவிலான உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.