நாடாளுமன்றம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் உறுப்புரை 70இன் பிரகாரம், ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களின்படி இன்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுகிறதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் , மீண்டும் எதிர்வரும் 2020 ஜனவரி 3ம் திகதி முற்பகல் 10 மணிக்கு கூடுமென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.