ஜனாதிபதி இந்தியாவில் கூறிய கருத்து நம்பிக்கையளிக்கிறது

13 ஆவதுதிருத்தம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இந்தியாவில்தெரிவித்திருந்த கருத்துக்கள் நம்பிக்கையை அளிப்பதாக தமிழ்சோசலி ஜனநாயக கட்சியின் தலைவர் வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார்.

சோசலிசமக்கள் முன்னணி இன்று கொழும்பில்நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதா அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் பிரசாரகாலத்தில் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் பெரும்பாலானவர்கள்தங்களுடன் இணைந்து செயற்பட்டுவந்தனர்.

எனினும் இறுதிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கற்பனையான, பிழையான பிரசாரங்களால் அவர்கள்மனமாற்றப்பட்டதகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழ்மக்களின் வாக்குகள் பயனற்றுப்போயுள்ளதை தற்போது அவர்கள் உணர்ந்துவருகின்றனர். அதனால் எதிர்வரும்பொதுத் தேர்தலில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும்என்ற நம்பிக்கை உள்ளதாகவும் வரதராஜ பெருமாள்தெரிவித்துள்ளார்.