ஜனாதிபதி கோட்டாபாயவிடம் மங்கள சமரவீர கேட்டுள்ள மில்லியன் ரூபாய் பெறுமதியான கேள்வி!

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவிடம் பாதுகாப்பு அமைச்சு பதவி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கேள்வியெழுப்பியுள்ளார்.

அமைச்சர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்ட நிலையில் குறித்த வர்த்தமானி தொடர்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர டுவீட் செய்துள்ளார்.

அதில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வழங்கப்பட்ட துறைகள் மற்றும் அமைச்சுக்களின் அளவு குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த பதிவில், “வர்த்தமானியை அவதானியுங்கள் பாதுகாப்பு என்பது ஒரு பலம்பொருந்திய ஆட்சியாளரால் வழிநடத்தப்படும், ஓர் அதி விசேட அமைச்சு போல் உள்ளது என்றும் குறிப்பிட்ட அவர் , சமூக நன்னடத்தை, ஆட்பதிவு, அரச சார்பற்ற நிறுவனங்கள், பொலிஸ், சட்டம் மற்றும் ஒழுங்கு உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது மில்லியன் ரூபாய் பெறுமதியான கேள்வி என்ன என்றால், யார் பாதுகாப்பு அமைச்சர்? என்பதே என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர பதிவிட்டுள்ளார்.