கூட்டமைப்பிற்குள் நுழையும் விஜயகலா? நிம்மதியில் சம்பந்தன்

ஐ. தே.க வின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் களமிறங்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐ.தே.க சார்பில் களமிறங்காமல், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிறங்க விஜயகலா மகேஸ்வரன் விரும்புவதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம், தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

அத்துடன் ஏற்கனவே விஜயகலா எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து பேச்சு நடத்தியதுடன் அண்மையில் கொழும்பில் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தியதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை விஜயகலா விவகாரத்தில் சாதகமான அபிப்பிராயத்தை கூட்டமைப்பின் தலைமை கொண்டிருப்பதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பில் இளையவர்களை இணைக்க வேண்டும் எனும் சம்பந்தனின் கனவு விஜயகலா இணைந்தால் ஆரம்பமாகியுள்ளது இதனால் எமது தலைவர் சம்பந்தன் கனவு முழுமையாக நிறைவேறும் என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடமாகாண அவைத் தலைவருமான சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.