ஐ.தே.க வின் அதிரடி- ரஞ்சனை தொடர்ந்து மூவர் நீக்கம்!

ஐ.தே.க வின் அதிரடி- ரஞ்சனை தொடர்ந்து மூவர் நீக்கம்!

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக ரஞ்சன் ராமநாயக்கவை விட மூவரை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இத்தகவலை அக்கட்சியின் பிரதித்தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுப்பட்ட விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

அந்தவகையில் கட்சியின் மூத்த தலைமை தொடர்பான விமர்சனம் மற்றும் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய மூவரை கட்சி அடையாளம் கண்டுகொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரஞ்சன் ராமநாயக்க போன்றே குறித்த நபர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை கட்சியில் இருந்து இடைநீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.