ராஜித சேனாரத்ன சிஐடியில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 26 ஆம் திகதி நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இருதய நோய் காரணமாக ராஜித சேனாரத்ன அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின்னர் மருத்துவர்களின் ஆலோசணைக்கமைய, இன்று அவர் வைத்தியசாலையிலிருந்து வௌியேறினார்.

இதேவேளை நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே ராஜித சேனாரத்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.