இலங்கை, ரஷ்யாவிற்கு இடையில் தொடர்ந்தும் ஆயுதப் பரிமாற்றம்!

இராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் இலங்கையுடன் தமது ஆயுத வர்த்தகம் தொடந்தும் முன்னெடுக்கப்படும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையுடன் இருதரப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்த ரஷ்யா முயற்சிக்கும் என்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இன்று இலங்கைக்கு வந்த அவர், வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பின்னர் கொழும்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை கூறியுள்ளார்.