ரஞ்சனை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

இந்த உத்தரவை சட்டமா அதிபர் திணைக்களம் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 111 (சி) பிரிவின் கீழ் நீதிபதிகளின் செயல்பாடுகளில் தலையிட்ட குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.