ரஞ்சனின் குரல் பதிவுகளை உடன் நிறுத்தவும்!

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களை தடுத்து நிறுத்த உடன் நடவடிக்கையெடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பொதுபலசேன அமைப்பு வலியுறுத்தியுள்ளது .

இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரே இதனை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.