தோ்தலுக்கு முன் றிஷாட், ஹக்கீம் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படவேண்டும்!

உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் தொடா்பாக குற்றஞ்சாட்டப் பட்ட றிஷாட், ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் நாடாளுமன்ற தோ்தலுக்கு முன்னா் கைது செய்யப்படவேண்டும் அத்தே ஞானசார தேரா் கூறியுள்ளார்.

நாட்டில் இன்னமும் அடிப்படைவாத மற்றும் மதமாற்று செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்ச்சியாக செயற்பட்டே வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன் அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று கொழும்பு இராஜகிரியவில் ஊடகவியலாளர் சந்திப்பை பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தநிலையில் அவர் நடத்துகின்ற இரண்டாவது ஊடக சந்திப்பு இதுவாகும்.

இதில் உரையாற்றிய ஞானசார தேரர், உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களையடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுவரை கைது செய்யப்படாதிருப்பது குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டார்.

நாட்டில் இன்றும் மதமாற்றுச் செயற்பாடும் அடிப்படைவாத செயற்பாடுகளும் கட்டுப்படுத்த முடியாத வகையில் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நாட்டிலுள்ள அனைத்து மத்ரஸா கல்லூரிகளையும் உடனடியாக அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்றும் தேரர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.