ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் கைது

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரத்துங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

மிக் விமான கொள்வனவு மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த இவர் சந்தேக நபரான இன்று கைதாகியுள்ளார்.

வெளிநாடொன்றில் இருந்த அவர் நாடு திம்புகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கைதாவரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2006 ஆம் ஆண்டு மிக்- 27 ரக விமான கொள்­வ­னவின் போது இடம்­பெற்ற சுமார் 14 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் நிதி மோசடி தொடர்பில் உத­யங்க வீர­துங்க சந்­தேக நப­ராக பெய­ரி­டப்­பட்டு பிடியா­ணையும் பிறப்­பிக்­கப்­பட்­டிருந்தமை குறிப்பிடத்தக்கது.