இறுதியில் என்னை காப்பாற்றியது ஒரு தமிழரே ! மனம் திறந்த ரஞ்சன் ராமநாயக்க

விளக்கமறியலில் வைக்கபட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க நேற்றையதினம் பிணையில் விடுவிக்கபட்டிருந்தார்.

இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இறுதியில் தன்னை காப்பாற்றியது பாராளுமன்றத்தில் உள்ள தமிழர் ஒருவரே என குறிப்பிட்டார்.

அத்துடன் , தான் தொடர்ந்தும் திருடர்களை பிடிக்கும் வேலையை செய்யபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு மோசடி , கொள்ளை ,ஊழல் தொடர்பாக எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் தனக்கு அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தான் சுயாதீனமாக போட்டியிட இருந்தாலும் சஜித் பிரேமதாசவின் கூட்டணி தனக்கு வேட்புமனு வழங்குவதாக தெரிவித்துள்ளதுடன், அவ்வாறு நடைபெறாவிட்டால் சுமந்திரன் தனக்கு வேட்புமனு வழங்குவதாக தெரிவித்துள்ளதாகவும் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஈஸ்டர் திருடர்களை பிடிப்பதற்கு, பிணைமுறை கொள்ளையர்களை பிடிப்பதற்கு வந்த அரசாங்கம் இறுதியில் ரஞ்சனை பிடித்ததாக அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

loading...