எதிர்கட்சியினரின் கோரிக்கையை நிராகரித்த மஹிந்த!

கொரோனா வைரஸினால் இலங்கை நடுங்கியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என எதிர்கட்சியினர் முன்வைத்த கோரிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று பகல் அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போது முன்னாள் அமைச்சர் ஹக்கீம், நாடாளுமன்றத்தை மீள அழைப்பதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.

எனினும் ஐரோப்பா, கனடா நாடுகளிலேயே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் மீள அழைப்பது சாத்தியமாகாது என பிரதமர் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கலந்துரையாடலில் இந்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ரவூப் ஹக்கீம், ஈ.பி.டி.பி தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக கட்சி பேச்சாளர் சுமந்திரன் மற்றும் அரசதரப்பிலுள்ள கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.