கட்சித்தாவல் ஆரம்பம்: மஹிந்தவுடன் இணைந்த பிரபல வேட்பாளர்

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவை வெளியிட்டு மொட்டுக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் தெவுந்தர தொகுதி அமைப்பாளரான அச்சிர கல்ஹார இலங்கம்மே என்பவரே இவ்வாறு கட்சி தாவியுள்ளார்.

அம்பாந்தோட்டை – கால்ட்டனில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று சந்தித்த அவர் தனது ஆதரவை அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.