சிறிகொத்தவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவினைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நேற்று பிற்பகல் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சிறிகொத்தவில் இருக்கும்போது மாத்திரமே சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும் நேற்று மாலை வரை சிறிகொத்தவிற்கு விஜயம் செய்யவில்லை என கூறப்படுகின்றது.

அதேபோன்று பெரும்பாலான பணியாளர்களும் கடமைக்கு வருகை தரவில்லை என சிறிகொத்தவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.