அடுத்தவாரம் முக்கிய முடிவை அறிவிக்கவுள்ள ரணில்?

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

சிறிகொத்தவில் இன்று பகல் ஒன்றுகூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நீண்டநேரம் கலந்துரையாடினர்.

அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே வஜிர அபேவர்தன இவ்வாறு கூறியிருக்கின்றார்.