வெளியானது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் விபரம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில், அக்கட்சிக்கு 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன.

அந்தவகையில், ரஞ்சித் மந்தும பண்டார, ஹரீன் பெர்னாண்டோ, இம்தியாஸ் பாகீம் மக்கார், திஸ்ஸ அத்தநாயக்க, எரான் விக்ரமரத்ன, மயந்த திஸாநாயக்க, தயானிகமகே போன்ற வேட்பாளர்கள் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்ல உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதேவேளை முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 பேர் கொண்ட தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.