ஆசனம் யாருக்கு? ஞானசாரர்- ரத்தன தேரர்களிடையே மோதல்!

பொதுத் தேர்தலில் ஆசனமொன்றை தேசியப்பட்டியல் ஊடாகப் பெற்றுக்கொண்ட எமது மக்கள் சக்திக் கட்சியிலிருந்து ஞானசார தேரரா அல்லது ரத்தன தேரரா நாடாளுமன்றத்திற்குள் செல்வார்கள் என்கிற நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது.

அந்தக் கட்சியின் கொடிச் சின்னத்தின் கீழ் இவ்விருவரும் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட போதிலும் நாடாளுமன்றம் செல்வதற்கு அளவான வாக்குகள் கட்சிக்குக் கிடைக்கவில்லை.

இருப்பினும் ஒட்டுமொத்த வாக்குகளை சரிபார்த்து தேசியப்பட்டியல் ஒன்று அந்தக் கட்சிக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அதனை அத்துரலிய அரத்தன தேரரா அல்லது ஞானசார தேரருக்கா பங்கிடுவது குறித்த பிரச்சினை தற்சமயம் அந்தக் கட்சிக்குள் உருவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.