அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதி சந்திப்பு

அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேர்ணல் ட்ராவிஸ் கொக்ஸ் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு ஸ்ரீஜயவர்தனபுரவில் அமைந்துள்ள இராணுவத்தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இரு தரப்பு உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் அதனை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன் போது கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை இராணுவத்தினர் உள்ளிட்ட ஏனைய துறையினரின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் அதற்காக அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.