நான்காவது முறையாக மீண்டும் பிரதமராகின்றார் மஹிந்த ! இன்று பதவிப் பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார்.

சத்தியப் பரமாண நிகழ்வானது களனி ரஜ மகா விகாரையில் இடம்பெற்றுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக பதவியேற்கும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் 2004, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒன்பதாவது பாராளுமன்றத்தில் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 527,364 விருப்பு வாக்குகளை பெற்றார்.

இலங்கையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிக எண்ணிக்கையிலான விருப்பு வாக்குகள் இதுவாகும்.