தேசிய பட்டியல் ஊடாக எம்.பி ஆகிறாரா மாவை சேனாதிராஜா..?

தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் நியமிக்கப்படவுள்ளதாக கட்சி தகவல்கள் தொிவிக்கின்றன.

திருகோணமலையில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.

நேற்றைய தினம் காலை முதல் மாலை வரை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிய்வருகின்றது.

குறித்த கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட தலைவரும், வட மாகாணசபை அவைத் தலைவருமான சீ.வி.கே.சிவஞானம், தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனகசபாபதி, தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராசசிங்கம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

இந்த கலந்துரையாடலில் சுமந்திரன் மற்றும் சிறீதரன் போன்றவர்களும் இணைந்திருந்ததாக திருகோணமலை செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் பலரது கருத்துக்களும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் தோல்வியுற்றபோது கட்சியின் மூத்த தலைவருக்கு தேசிய பட்டியல் வழங்கப்பட்டமையும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டோரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.