ஆகஸ்ட் 12 இல் புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவியேற்பு?

புதிய பாராளுமன்றத்தின் தேசிய பட்டியில் பிரதிநிதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியிடப்பட்டால், அமைச்சரவை அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வானது ஆகஸ்ட் 12 ஆம் திகதி இடம்பெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இந்த தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உறுதிப்படுத்தினார்.

புதியமை அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வானது கண்டி மகுல் மடுவ மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

புதிய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கையானது மட்டுப்படுத்தப்பட்ட வகையில் அமையப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.