நாளை ரணில் விடுக்கவுள்ள முக்கிய அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, நாளை முக்கிய அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட கடும் தோல்வியை ​அடுத்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே, முக்கிய அறிவிப்பை ரணில் விக்கிரமசிங்க விடுக்கவுள்ளார்.

அத்துடன் கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகுவதற்கு அவர் தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

எனினும், புதிய தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்படும் வரையிலும் ​தலைவர் பதவியில் ரணில் விக்கிரமசிங்க இருப்பார் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.