ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து 14 பேர் தெரிவு

நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து 14பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் கூட்டு சேர்ந்தும் மூன்று மாவட்டங்களில் தனித்தும் போட்டியிட்டிருந்தன.

அதன் பிரகாரம் பொலன்னறுவை, குருணாகலை, காலி, பதுள்ளை,அனுராதபுரம், அம்பாந்தோட்டை, கேகாலை, மொனராகலை, கம்பஹா மற்றும் வன்னி மாவட்டங்களில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனித்து போட்டியிட்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பனர்கள் 14பேர் தெரிவாகி இருக்கின்றனர்.

அதனடிப்படையில் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவருமான மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகர, ஷான் விஜேலால், சான்த்த பண்டார, சாமர சம்பத் தசநாயக்க, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த அமரவீர, ரஞ்சித் சியம்பலாபிடிய, ஜகத் புஷ்பகுமார, லசன்த்த அழகியவன்ன, சாரதி துஷ்மன்த, நிமல் சிறிபால டிசில்வா, காதர் மஸ்தான் மற்றும் யாழ். மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்ட அங்கஜன் ராமநாதன் ஆகியோர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இருக்கின்றனர்.