பதவியில் இருந்து ரணில் விலகுவாரா? தீர்மானம் இன்று!

பொதுத்தேர்தலில் ஏற்பட்ட பாரிய தோல்வியை அடுத்து கட்சி எதிர்கொண்டுள்ள நெருக்கடி தொடர்பில் தீர்மானம் எடுக்க ஐக்கிய தேசிய கட்சி இன்று கூடுகிறது.

இந்த செயற்குழு கூட்டம் இன்று முற்பகல் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் இடம்பெறும்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரணில் விலகுவாரா? தேசியப்பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றம் செல்லப்போவது யார்? போன்ற பிரச்சினைகளுக்கு இன்று பெரும்பாலும் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்கு அக்கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க, பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், முன்னாள் எம்.பிக்களான ருவன் விஜேவர்தன, வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்களும் கட்சியின் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.