ஐ.தே.க தேசிய பட்டியலில் புதுமுகம்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசிய பட்டியல் எம்.பியை யாருக்கு கொடுப்பது என்பது தொடர்பில் இழுபறி நிலவிவந்தது.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தேசிய பட்டியலின் ஊடாக பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் ரணி்ல் அதற்கு மறுத்துவிட்டார்.

இந்நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களை தேசியப்பட்டியலின் ஊடாக அனுப்பக்கூடாது என்பதில் ரணில் உறுதியாக இருந்ததனால் கட்சிக்குள் முரண்பாடுகள் நிலவின.

இதனையடுத்து, மக்கள் வங்கியின் முன்னாள் தலைவர் நிஷங்க நாணயகாரவை, தேசிய பட்டியல் எம்.பியாக பரிந்துரைத்து, அவருடைய பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு, கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் அனுப்பிவைத்துள்ளதாக கூறப்படுகின்றது.