கூட்டமைப்பை கலைக்க வேண்டும்;வீ.ஆனந்தசங்கரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக கலைக்கப்படவேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்றும், ஆகவே இக்கட்சி சட்டவிரோதமானது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.