பிரதமரின் செயலாளராக காமினி செனரத் மீண்டும் நியமனம்

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான காமினி சேதர செனரத் மீண்டும் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது நியமனக் கடிதத்தினை இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது மேலதிக செயலாளராகவும் பணிக்குழாம் பிரதிநிதியாகவும் கடமையாற்றிய காமினி செனரத் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான செனரத் 1984 இல் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணனி தொழிநுட்பத்தில் பட்டப்படிப்பினை பெற்றுள்ள அவர் வெளிநாட்டு கற்கைகளையும் பூர்த்தி செய்துள்ளார்.