புதிதாக பதவியேற்கும் 24 அமைச்சர்கள் இவர்கள்தான்!

நாட்டில் புதிதாக பதவியேற்கவுள்ள அமைச்சர்களின் பெயர்கள் மற்றும் விபரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி,

01. உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் – சமல் ராஜபக்ஸ

02. வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் – பிரியங்கர ஜயரட்ண

03.சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் – துமிந்த திஸாநாயக்க

04.பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் – தயாசிறி ஜயசேகர

05. கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் – லசந்த அலகியவண்ண

06.சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புல்லே

07.தென்னை , கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அதுசார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் – அருந்திக்க பெர்னாண்டோ

08 -கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு- நிமல் லன்ஷா

09- களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – ஜயந்த சமரவீர

10. காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் அரச தொழில்முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – ரொஷான் ரணசிங்க

11- கம்பனித் தோட்டங்களைச் சீர்திருத்துதல், தேயிலைத் தோட்டங்கள் சார்ந்த பயிர்ச்செய்கைகளமற்றும் தேயிலைத் தொழில்சாலைகளை நவீனமயப்படுத்துதல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் – கனக ஹேரத்

12-தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் கிராமியச் சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் – விதுர விக்ரமநாயக்க

13- கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை அபிவிருத்தி மற்றும் அதுசார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் – ஜானக வக்கும்புர

14 – அறநெறிப் பாடசாலைகள், பிக்குமார் கல்வி, பிரிவெனாக்கள் மற்றும் பௌத்த பல்கலைக்கழகங்கள் இராஜாங்க அமைச்சர் – விஜித பேருகொட

15 – சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில், வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – செஹான் சேமசிங்க

16- உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள், இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் – மொஹான் த சில்வா

17- இரத்தினக்கல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள்சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் – ரொஹான் ரத்வத்த

18-வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் – திலும் அமுனுகம

18-வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் – திலும் அமுனுகம

19- வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்; இராஜாங்க அமைச்சர் – விமலதீர திஸாநாயக்க

20. பிராந்திய உறவு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் – தாரக பாலசூரிய

21- கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் – இந்திக அனிருத்த

22- அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள் இறால்களை வளர்த்தல், கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, நீண்டநாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் – காங்ஜன விஜேசேகர

23- கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – சனத் நிஸாந்த

24 – மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புகள் பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் – சிரிபால கம்லத்