ராஜபக்ஷ குடும்பத்துக்கு 8 அமைச்சுக்கள்? பலர் அதிருப்தியில்

அமைச்சரவை அமைச்சுக்கள் பகிரப்பட்ட விதம் குறித்து அரசங்கத்திலுள்ள முக்கிய அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமக்கு நெருக்கமான சிலருக்கு சிறந்த பதவிகளை வழங்கி விட்டதாக முக்கிய புள்ளிகள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை, இம்முறை நியமிக்கப்பட்ட அமைச்சரவையில் ராஜபக்ஷ குடும்பத்துக்கு 8 அமைச்சுக்கள் பகிரப்பட்டுள்ளதாக அதிருப்தியில் உள்ள அமைச்சர்களும் சில இராஜாங்க அமைச்சர்மாறும் சுட்டிக்காட்டியுள்ளனர்.