மூன்றாவது நாளாக ரிஸாட்டிடம் இன்றும் விசாரணை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியூதீனிடம் மூன்றாவது நாளாக இன்றைய தினமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றைய தினமும் ஆஜராகும்படி ரிஸாட் பதியூதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இன்று முற்பகல் ஆணைக்குழுவில் அவர் ஆஜராகியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஸாட்டிடம் நேற்றும் , நேற்று முன்தினமும் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன.

அதேபோல ஈஸ்டர் தினத்தில் தாக்குதல்களுக்குத் தலைமைதாங்கிய சஹ்ரான் ஹாஷிமுக்கு ஆலோசகராக செயற்பட்ட நவ்பர் மௌலவியிடம் இன்றும் ஆணைக்குழு இரண்டாவது நாள் விசாரணையை நடத்திவருகின்றது.

இதேவேளை இரகசிய பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தற்சமயம் இருக்கின்ற அவரிடம் நேற்று 6 மணிநேர விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.