ரணில்,சுமந்திரன்,அநுர,சம்பிக்க,மங்கள,மலிக் ஆணைக்குழுவில் ஆஜர்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட பலர் இன்று அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, ஜே.வி.பியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டவர்களும் ஆணைக்குழு முன்பாக இன்று முற்பகல் 10.30 அளவில் ஆஜராகியிருக்கின்றனர்.

திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்கவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டில் இவர்கள் அனைவரும் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.

இதேவேளை, ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கும் இன்று விசாரணைக்கு வரும்படி ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.