20ஐ அமுல்செய்தால் புலம்பெயர் தமிழருக்கும் அதிர்ஷ்டம்!

20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக புலம்பெயர் தழிழர்களும் ஆட்சியதிகாரத்திற்கு வரும் வழிகளை அரசாங்கம், ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹெக்டர் அப்புஹாமி இதனைக் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“சிங்கள பௌத்தம் தொடர்பில் அக்கறையுடன் பேசி வந்தவர்கள். இன்று புலம்பெயர் தமிழர் அமைப்பினருக்கும் ஆட்சி அதிகாரங்களை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை எடுத்துள்ளனர்.

இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலைமை ஏற்பட்டால், புலம்பெயர் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நாட்டின் அதிகாரங்களை கைப்பற்றிக் கொள்வதற்கான வாய்ப்புள்ளது.

இந்நிலையில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நாம் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக பல போராட்டங்களை நடத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.