அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறார் சுஜீவ சேனசிங்க?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் சுஜீவ சேனசிங்க அரசியலிருந்து ஓய்வுப் பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க ஆகஸ்ட் 05 ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேல்தலில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார்.

இந் நிலையில் எதிர்காலத்தில் அரசியல் பயணத்தை தொடர விரும்பவில்லை என்றும் தனது தொழிலில் கவனம் செலுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் அவர் 2021 ஜனவரி முதல் கலாநிதி பட்டப்படிப்பை தொடங்கவுள்ளமையும் அவரின் இந்த தீர்மானத்துக்கு ஒரு காரணமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.