இலங்கையை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமரை வரவேற்ற பிரதமர் மஹிந்த

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை 4.15 மணிக்கு இலங்கையை வந்தடைந்தார்.

இலங்கையை வந்தடைந்த பாகிஸ்தான் பிரதமரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம் சென்று வரவேற்றார்.

இதன்போது இம்ரான் கானுக்கு செங்கம்கள வரவேற்பளிக்கப்பட்டது.

இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நாளை ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், அதனையடுத்து வர்த்தகம் மற்றும் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.