பூமியில் நீர் எப்படி தோன்றியது தெரியுமா? ஆய்வில் விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய தகவல்!

பூமி 71% சத விகிதத்தால் நீரினால் நிறம்பி உள்ளது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் எமது பூமி உருவாகிய வேளை பூமியில் கடல் உருவாகி இருக்க வாய்பே இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கடந்த 10 ஆண்டுகளாக இது குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கையில். ஆரம்ப காலத்தில் பலவகையான வாயுக்கள், தூசிகள் மற்றும் படலங்கள் என இருந்த ஒரு இடம். பின்னர் மெல்ல மெல்ல இறுகி பாறைகளாக மாறி உருவெடுத்தது.

அது தன்னை தானே சுற்ற ஆரம்பித்த வேளையில், சூரியனின் அதீத வேப்பம் காரணமாக வாயுக்கள் உருகி, அருகே உள்ள மூலக் கூறுகள் தூசிப் படலங்களோடு சேர்ந்து பெரும் கற்களாக மாறியுள்ளது.

இதனால் பூமிக்கு என்று ஒரு நிறை தோன்ற ஆரம்பித்தது. பின்னர் அது சுழல்வதால் ஏற்பட்ட புவி ஈர்ப்பு விசை காரணமாக அது அருகில் உள்ள மேலதிக பாறைகளையும் உள்ளே இழுத்துக் கொண்டது.

அந்த கால கட்டங்களில் பூமி தற்போது இருந்ததை விட மிகவும் வெப்பமாக காணப்பட்டது. பல இடங்களில் எரி மலைகள் காணப்பட்டது. அந்த வேளைகளில், பூமியில் நீர் இருக்கவே இல்லை.

வெறும் பாறைகளால் ஆன ஒரு கிரகமாகவே இருந்தது. பின்னர் ஐஸ் கட்டிகளை கொண்ட பல ராட்சச விண் கற்கள் பூமி மீது மோதி. அந்த பாறைகள் உருகியே நீர் தோன்றி இருக்க வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

1997ம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட ஒரு வகையான பாறைகளின் உள்ளே நீர் காணப்படுகிறது என்ற விடையம் விஞ்ஞானிகளை அதிர்சியடை வைத்தது. அது போக சஹாரா 97096 என்ற சிறிய விண் கல் பூமியில் விழுந்த வேளை. அதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள்.

அது சுமந்து வந்த ஐஸ் கட்டி நீரையும் ஆராய்ந்துள்ளார்கள். குறித்த சில கற்களுக்கு உள் பகுதியில் பெரும் அலவில் நீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எனவே விண் கற்கள் மூலமே பெரும்பாலான நீர் பூமிக்கு வந்திருக்க வேண்டும் என்றும். பின்னர் அது , பூமியில் ஏற்கனவே இருந்த உப்பு போன்ற தாதுக்களோடு கலந்து கடல் நீராக மாறி இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

ஒட்டு மொத்தத்தில் பார்த்தால் ஏம் ஏலியன்கள் என்று யாரைச் சொல்கிறோமோ, அவர்கள் தான் நாம் என்று கூறும் அளவுக்கு இந்த பூமி உள்ளது.

காரணம் பூமியில் உள்ள பல விடையங்கள் பூமிக்கு சொந்தமானவை அல்ல. அவை வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்தவை தான் என்பது மெல்ல மெல்ல நிரூபனமாகி வருகிறது.