பொட்டம்மானுக்கு நெருக்கமானவர் விடுதலை செய்யப்பட்டாரா?

பொட்டுஅம்மானுக்கு மிகவும் நெருக்கமானவரான மொறிஸ் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக வெளியாகிய தகவல்களை, இலங்கையின் மூத்த புலனாய்வு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானுக்கு மிகவும் நெருக்கமானவரான மொறிஸ், கொழும்பில் பல உயர்மட்டத் தாக்குதல்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்.

தொடர்ந்தும் தடுப்புக்காவலில் உள்ள அவர், நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். பருத்தித்துறைப் பொறுப்பாளராக முன்னர் இருந்த மொறிஸ், இந்திய அமைதிப்படைக்கு எதிரான தாக்குதல்களிலும் பங்கேற்றவர்.

இவர் விடுவிக்கப்பட்டு விட்டார் என்று வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று மூத்த புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மொறிஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்ற பொய்யான தகவல்களை தாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தரப்பினர் தமது ஆதரவு ஊடகங்களினூடாக வெளியிட்டுவருகின்றனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.