ஹிஸ்புல்லாவிடம் 8 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா இன்று பயங்கரவாத விசாரணைப் பிரிவில் 8 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இரவு 10 மணியளவில் கல்குடா பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் அரேபிய பிரஜைகள் இருவரை சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணை குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தா​ர்.

இதன் பிரகாரம், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்று காலை 9.30 அளவில் ஆஜராகினார். இன்று மாலை 5.30 அளவில் அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவிலிருந்து வௌியேறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.