முதல் தடவையாக இலங்கையில் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாடு

முதல் தடவையாக ஆசிய கடற் பாதுகாப்பின் பிரதான மாநாட்டின் 15ஆவது கூட்டம் இடம்பெறவுள்ளது.

இலங்கை கடற் பாதுகாப்புத் திணைக்களம் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இது தொடர்பான செயற்பாட்டு பிரதிநிதிகளின் கூட்டம் கொழும்பு கோல்ஃபேஸ் ஹொட்டலில் இன்று ஆரம்பமானது.

இந்தக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த மாநாடு இலங்கையில் இடம்பெறுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.