இலங்கையில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு! அரசின் அறிவிப்பு

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை ஆறு மணி நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கு 23ஆம் திகதி காலை ஆறு மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணி தொடக்கம் 24ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24 ஆம் திகதி மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது தொடர்பில் அறிவிக்கப்படும்.

loading...