உலக சந்தையில் முதன்முறையாக தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

உலக சந்தையில் முதன்முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது இரண்டாயிரம் டொலர்களை (370580 இலங்கை ரூபா) அண்மித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த வருடத்தின் ஆரம்பம் முதலே உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்திருந்தது.

இதன் காரணமாக உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நிலை தங்கத்தின் விலையில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக தொடர்ச்சியாக தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகி வந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே முதல்முறையாக உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரம் டொலர்களை அண்மித்துள்ளது.

இதேவேளை, வெள்ளியின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.