இந்த குருபெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் அடிக்கபோகுது தெரியுமாம்..நீங்களே பாருங்கள்

இந்த குருபெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கபோகுது என்பதை கீழே காணலாம்

மேஷம்

எவ்வளவு அடித்தாலும் தாங்கும் மேஷ ராசிக்காரர்களே, உங்களது வாழ்க்கை துணைக்குத் தான் எல்லா அம்சமும் பொருளளாதார வசதி பெருகும். உங்களுக்கு செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்க நினைத்தால், ஐப்பசி, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் வாங்கலாம். தொழில் சார்ந்த வெளியூர் பயணங்கள் ஏற்படும். அலுவலகத்தில் நற்பெயர் உண்டாகும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு அனுகூலமாக நடக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க் கிழமை தோறும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வரவும்

ரிஷபம்

சிக்கனமாக இருப்பீர்கள். தேவையில்லாத செலவுகளை குறைக்க முயற்சிப்பீர்கள். பிள்ளைப்பேறு வேண்டுபவர்கள் சிறிது காலம் மட்டும் பொறுத்துக் கெள்ளுங்கள். வேலைக்குச் செல்வோர்களுக்கு பதவி உயர்வு தாமதமாக கிடைக்கும். சொந்த வீடு வாங்க நினைப்போர்கள், ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, சித்திரை, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வாங்கலாம்.

பரிகாரம்: ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் சனிபகவானை பிராத்தியுங்கள். மன நிம்மதி கிட்டும்

மிதுனம்

குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். குறிப்பாக ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களில் குடும்பத்தில் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுவோருக்கு அவர்கள் விரும்பிய உத்தியோகம் கிடைக்கும். மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய துறையில் சேருவார்கள். திருமணத்திற்கு காத்திருப்போர்களுக்கு இந்தாண்டு திருமணம் கைகூடும். ஆனால், அதற்கு ஏற்ற சில பரிகாரங்கள் செய்தல் நலம். வீடு, சொத்து வாங்க நினைப்போர்கள் வைகாசி, ஆனி மாதங்களில் வாங்கலாம். மார்கழி, தை மாதங்களில் வெளியூர் பயணங்கள் ஏற்படும்.

பரிகாரம்: காயத்திரி மந்திரம் ஜெபிக்கலாம்

கடகம்

உடல்நலம் முன்னேறும். தொலைவில் இருந்து உதவிகள் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சிப் பெருகும். இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. குரு பார்க்க கோடி நன்மை என்பது கச்சிதமாக பொருந்துகிறது. ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கிழி மாதங்களில் மட்டும் குடும்பத்தில் அவ்வபோது மனஸ்தாபங்கள் வந்து போகும். பணவரவு அதிகரிக்கும். விரும்பியதை வாங்கி மகிழ்வீர்கள். பங்குனி, சித்திரை மாதங்களில் புதிய சொத்துக்கள் வாங்கலாம். திருமணத்துக்கு காத்திருப்போர்களுக்கு, பல தடைகளுக்குப் பிறகே திருமணம் நிச்சயமாகும். மாணவர்கள் விரும்பிய துறையில் சேரலாம்

பரிகாரம்: தினமும் காலை, சர்வ வஷ்ய தன ஆகர்ஷன சங்கல்பம் தவறாமல் செய்து வாருங்கள். நினைத்தது நடக்கும்

சிம்மம்

இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சில பரீட்சைகள் வைப்பதாக எண்ணிக் கொள்ளுங்கள். மார்கழி, தை மாதங்களில் மட்டும் குடும்பத்தினருடன் பொறுமையாக இருப்பது நலம். வியாபாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும். புதிதாக வேலை தேடுவோருக்கு சற்றுத் தாமதமாகத் தான் உத்தியோகம் கிடைக்கும். விரும்பிய வேலை கிடைக்கும். இதே போல் அலுவலகத்தில் பதவி உயர்வு எதிர்பார்போர், சற்று பொறுமையாக இருக்க வேண்டும். ஆனால், நிச்சயம் கிடைக்கும். பயணங்களில் கவனம் தேவை. விபத்துக்கள் ஏற்படலாம்.

பரிகாரம்: தினமும் சிவன் கோயிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சிரமங்கள் குறையலாம்

கன்னி

இந்தாண்டு குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. வியாபாரம், உத்தியோகம், திருமணம், வீடு, நிலம் அனைத்திலும் உங்களுக்கு வெற்றி தான். திருமணத்துக்கு காத்திருப்போர் இந்தாண்டுக்குள் உங்களுக்கு நிச்சயமாக திருமணம் கைகூடும். கர்ப்பணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அடிக்கடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஆடை, ஆபரணங்கள், புதிய சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். பண வரவு அதிகரிக்கும்.புதிதாக வேலை தேடுபவர்களுக்கு மட்டும் இந்த குருபெயர்ச்சி சிறிது சோதனை காலமாக அமைகிறது. உடனே வேலை கிடைக்காது. போராடி தான் வேலை பெற வேண்டியதாக தெரிகிறது.

பரிகாரம்: சனிபகவானை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள்

துலாம்

புதிதாக வீடு,நிலம், சொத்து வாங்க நினைப்போர்கள், ஐப்பசி, சித்திரை, வைகாசி மாதங்களில் வாங்கலாம். திருமணத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு மாசி, பங்குனி, ஆவணி மாதங்கள் கை கொடுக்கும். தொழில் ராசிக்கார்களுக்கு கார்த்திகை, மார்கழி, மாசி, சித்திரை, ஆவணி நல்ல மாதங்கள். திருமணமாகி பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் மருத்துவரை அணுகி தேவையான ஆலோசனைகளைப் பெறவும். குடும்பத்தினருடன் மனக்கசப்புகள் வந்து போகும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரம்,

பரிகாரம்: சனிபகவானை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள்

விருச்சிகம்

குடும்பத்தினருடன் மனக்கசப்பு உண்டாகும். பணப் பற்றாக்குறை ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். வீடு சொத்து வாங்க நினைப்போர் மார்கழி, ஆடி, ஆவணி மாதங்களில் வாங்கலாம். ஆடியில் கிரகப்பிரவேசம் செய்ய விரும்பாதவர்கள் ஆவணியில் செய்யலாம். ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வீர்கள். பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிற்சில காயங்கள் ஏற்படலாம். பிள்ளை வரம் வேண்டி நிற்பவர்களுக்கு இந்த வருடம் குருபகவான் அருள் புரிவார். நண்பர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வது நலம்.

பரிகாரம்: சிவனை வழிபடுங்கள். வாழ்வில் திருப்பம் உண்டாகும்

தனுசு

எதிலும் கால தாமதம் ஏற்படும். வேலை தேடுவோர்களுக்கு வேலை கிடைப்பதில் தாமதமாகும். திருமணம் சுபகாரியங்கள் தடை ஏற்படும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். எங்கு சென்றாலும், வார்த்தைகளளை கவனமாக பேசவும். சொத்துக்கள் வாங்க சரியான நேரம் இந்த குருபெயர்ச்சி. நீங்கள் இந்த வருடத்தில் எந்த மாதத்தில் வேண்டுமானாலும், என்ன சொத்துக்கள் வேண்டுமானாலும் வாங்கலாம். வியாபாரத்தில் இருப்போர்களுக்கு சிறுசிறு தடைகள் உருவாகும். அலுவலகத்தில் வேலை பார்ப்போர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதும் கடினம். உழைப்புக்கேற்ற நற்பெயர் கிடைப்பது உங்களின் தனிப்பட்ட ஜாதகத்தில் பார்த்தால் மட்டுமே தெரியவரும்

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபடுங்கள்

மகரம்

பணப்புழக்கம் குறைவாக இருக்கும். ஆனால், செலவுகள் அதிகரிக்கும். பணத்தை சேமிக்க வழி தேடுவீர்கள். செலவுக்கு பணம் இல்லாமல் சிரமபப்படும் சூழலும் உருவாகும். உங்களது ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால் இதில் இருந்து தப்பித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகும். குருவின் பார்வை கிடைப்பதால், வியாபாரம் மேலோங்கும். அலுவலகத்தில் வேலைப் பார்போருக்கு பணிச்சுமை கூடும் வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். மாணவர்கள் அவர்கள் விரும்பிய துறையில் சேர்க்கை கிடைக்கும். நீண்ட காலமாக புது வீடு வாங்க முயற்சித்தவர்களுக்கு, இந்த குருபெயர்ச்சி கை கொடுக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனிபகவானை கோவிலுக்குச் சென்று வழிபடவும்.

கும்பம்

இந்த வருட குருபெயர்ச்சி உங்களுக்கு அமோகமாக அமைந்துள்ளது நினைத்த காரியம் நிறைவேறும். உற்றார் உறவினர்கள் மத்தியில் நன்மதிப்பு உருவாகும். உங்கள் புகழ் பாடுவார்கள். பொருளாதாரம் முன்னேற்றம் காணும். புதிய வீடு கட்டுவீர்கள். அதற்கு தேவையான இடவசதி, பொருள் வசதி, கடனுதவி கிடைக்கும். பிள்ளைப் பேறு வேண்டியவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். அவ்வபோது மருத்துவரின் ஆலோசனைகளையும் பெற்றுவாருங்கள். உடல்நலத்தில் அவ்வபோது குறைபாடு உண்டாகும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

பரிகாரம்: சிவனை வழிபடுங்கள் நன்மை உண்டாகும்.

மீனம்

உங்கள் வாழ்க்கை துணைக்கு எதிர்பாரத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். வீடு, சொத்து வாங்க நினைப்போர்களுக்கு கால தாமதம் ஏற்படும். ஆனால், நிச்சயம் வாங்குவீர்கள். இதே போல், திருமணத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு சுபகாரியம் உண்டாகும். பிள்ளை பேறு கிடைக்காதவர்களுக்கு வரும் பங்குனி மாதத்துக்குப் பின் குருபகவானின் அருளால் புத்திர பாக்கியம் கடைக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். மொத்தத்தில் இந்த வருடம் உங்களுக்கு ஒன்பதில் குரு.

பரிகாரம்: சனிபகவானை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள்