நாளை கொண்டாடப்படவுள்ளது புனித ரமழான் பண்டிகை

உலகின் பல நாடுகளின் ரமழான் தொடங்கிய நிலையில், வானில் பிறை தென்பட்டதால் இலங்கையில் நாளை கொண்டாடப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வானில் ஷவ்வால் மாத தலைப்பிறை இன்று இரவு தென்பட்டதால் இலங்கையில் ரமழான் பண்டிகையை இஸ்லாமியர்கள் நாளை கொண்டாடுகின்றனர்.

இஸ்லாமியர்களின் புனித மாதமாகக் கருதப்படும் ரமழான் மாதத்தில், ஆண்டு தோறும் பிறை கண்டு நோன்பு தொடங்குவது வழக்கம். இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்ற முஸ்லிம் மக்கள் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதுடன் ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.