ஆசிரியர்கள் சித்ரவதையால் மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை

கேரளாவில் 10 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஆசிரியர்களின் சித்ரவதை தாங்காமல் பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில், கொல்லம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், கடந்த 20-ம் தேதியன்று பள்ளி மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த அவரை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரிக்கையில், ஆசிரியைகளின் சித்ரவதை தாங்காமலே அந்த மாணவி தற்கொலை செய்ய முயற்சித்ததாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் இரு ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்பினர் நியாயம் கேட்டு இதற்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.