யாழில் கைதான பிரபல தாதா!! யார் என்று தெரிகிறதா..?

யாழ்.மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இருந்து தப்பியோடிய வாள் வெட்டு சந்தேக நபருக்கு மல்லாகம் நீதிவான் ஒன்றரை வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

யாழில்.இயங்கும் ஆவா குழுவின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் என சந்தேகிக்கப்படும் நிஷா விக்டர் என அழைக்கப்படும் எஸ்.நிஷாந்தன் (வயது 22) என்பவரை கடந்த வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் அழைத்து வரப்பட்ட போது , நீதிமன்ற வாளகத்தில் இருந்து தப்பியோடி இருந்தார்.

தப்பியோடிய சந்தேக நபரை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் பொலிசார் இணைந்து தேடுதல் நடாத்தி ஒரு சில மணி நேரத்தில் மீள கைது செய்து பலத்த பாதுகாப்புடன் மீள நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

அந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் இருந்து தப்பியோடியமை தொடர்பிலான வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதவான் அ. ஜூட்சன் முன்னிலையில் நடைபெற்றது.

அதன் போது சந்தேக நபர் மன்றில் முற்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து நீதிமன்றில் இருந்து தப்பி சென்ற குற்றத்திற்காக ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.